2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வனராஜா தோட்டத்தில் 50 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டல்

Editorial   / 2019 மார்ச் 20 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில், டிக்கோயா வனராஜா மேல்பிரிவு
தோட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள 50 தனி வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று (20) நடைபெற்றது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கண்டியிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் உதவி உயர்ஸ்தானிகர் திரேந்திரசிங், மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான சிங்பொன்னையா, சோ.ஸ்ரீதரன், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமனி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த வீடமைப்புத் திட்டத்தில், தலா 10 இலட்சம் ரூபாய் செலவில் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், நிதி மின்சார வசதி, குடிநீர் வசதி, போக்குவரத்து வசதி அடிப்படைத் தேவைகளும் நிறைவேற்றிக் கொடுக்கப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X