2026 மார்ச் 10, செவ்வாய்க்கிழமை

வீரவனிதையர் விருது விழா...

Editorial   / 2026 மார்ச் 08 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, புதிய அலை கலை வட்ட மகளிர் அணியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட 'வீரவனிதையர் விருது விழா' கொழும்பில் மிகப் பிரம்மாண்டமாகக் கடந்த சனிக்கிழமை (07)  அன்று  நடைபெற்றது.

இந்நிகழ்வில், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்  திருமதி சரோஜா சாவித்திரி போல்ராஜ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். பிரபல தொழிலதிபர் பி.எஸ்.செல்வரட்ணம் முன்னிலை வகிக்க, பல்வேறு துறைகளைச் சார்ந்த முக்கியஸ்தர்கள் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தமிழகத்தில் இருந்து இந்நிகழ்விற்காக விசேடமாக வருகை தந்த கவிஞர் தங்கம் மூர்த்தி, தினகரன் பத்திரிகையின் ஆசிரியர் செந்தில்வேலவர், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் காயத்ரி விக்கிரமசிங்க, எம்.யோகராஜா மற்றும்  வைத்தியமாநிதி டாக்டர் கனகலட்சுமி ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

சமூகத்தில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய 20 பெண்களுக்கு 'வீரவனிதையர் விருது' வழங்கி கௌரவிக்கப்பட்டது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .