2025 ஜூலை 31, வியாழக்கிழமை

வவுனியா விபத்தில் ஒருவர் காயம்

Princiya Dixci   / 2017 ஜனவரி 21 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா, குருமன்காட்டுபகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்து சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

வவுனியா - மன்னார்  வீதியில் வேப்பங்குளம் பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்துகொண்டிருந்த கனரக வாகனமென்றை, முச்சக்கர வண்டியொன்று முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் கனரக வாகனத்தின் பிற்பகுதியில் மோதுண்டு எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் முச்சக்கர வண்டி மோதியதில் விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் காயமடைந்த நிலையில், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் முச்சக்கரவண்டி சாரதி தப்பியோடிய நிலையில் பொது மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாhரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

குறித்த முற்சக்கரவண்டியின் சாரதி மதுபோதையில் இருந்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்த நிலையில், அங்கு செய்தி சேகரித்த செய்தியாளர்கள் மற்றும் பொது மக்களுடனும் அவர் தர்க்கத்தில் ஈடுபட்டார்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை, வவுனியா போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(படப்பிடிப்பு: க. அகரன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .