Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூன் 15 , பி.ப. 01:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையக பகுதிகளில் உள்ள பெரும் தோட்டங்களில் வாழும் மக்கள் சுகாதார வசதிகளை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்களுக்கு இன்று வரை முகம் கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் தலவாக்கலை பிரதேச செயலக நிர்வாகத்திற்கு உட்பட்ட டயகம பகுதியில் உள்ள பிரதேச வைத்தியசாலையில் தொடர்ச்சியாக பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் அங்கு பணிபுரியும் சுகாதார அதிகாரிகள் அலட்சியம் போக்கினை கொண்டு இயங்கி வருவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இவ்வாறு இந்த வைத்தியசாலையில் நிலவும் அலட்சியப் போக்கு மற்றும் பல பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை (15) அன்று பிரதேச மக்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
குறிப்பாக வைத்தியசாலையில் பணியாற்றும் அதிகாரிகள் சிகிச்சைக்காக வைத்தியசாலையை நோக்கி வரும் நோயாளிகளை கண்டு கொள்வதில்லை என்றும் உரிய நேரத்தில் உரிய சிகிச்சைகளை துரிதமாக வழங்குவதில்லை என்றும் குற்றம் சுமத்துகின்றனர்.
ஏதாவது ஒரு விபத்தில் காயமடைந்த நோயாளியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் சந்தர்ப்பத்தில் மேலும் பல நோயாளர்கள் வருகை தந்தால் மாத்திரம் காயங்களுக்கு மருந்து போட முடியும் என வைத்தியசாலையின் தாதியர்கள் உட்பட அனைவரும் தெரிவிப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு மேலதிக சிகிச்சைகளுக்காக நோயாளிகளை வேறு வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் எனின் டயகம வைத்திய சாலையில் ஆம்புலன்ஸ் வசதிகள் இல்லை என்றும் இதன் காரணமாக மக்கள் தமது சொந்த பணத்தைக் கொண்டு வாடகைக்கு அமர்த்தப்பட்ட வாகனங்களிலேயே நோயாளிகளை வேறு வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டிய துயர் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள தாகவும் குற்றம் சுமத்துகின்றனர்.
அதேபோல் குறித்த வைத்தியசாலைக்கு செல்லும் வீதியும் மிக மோசமான நிலையில் இருப்பதன் காரணமாக அவசர சிகிச்சைக்காக நோயாளிகளை கொண்டு செல்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றது என்றும் சில சந்தர்ப்பங்களில் நோயாளிகள் மரணித்த உள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான பிரதேச மக்கள் கலந்து கொண்டதுடன் கைகளில் பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி வைத்தியசாலையின் செயற்பாடுகளுக்கு எதிராக எதிர்ப்பினை மக்கள் வெளிப்படுத்தினர்.
கௌசல்யா
8 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago