2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

உலகக்கிண்ண 8ஆம் நாள் முடிவுகள்: இங்கிலாந்து வெளியேறியது

A.P.Mathan   / 2014 ஜூன் 20 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கால்பந்தாட்ட உலகக்கிண்ண தொடரின் எட்டாவது நாளான நேற்று நடைபெற்ற போட்டிகளில் முதல் போட்டி ஐவரிகோஸ்ட் - கொலம்பியா அணிகளுக்கிடையில்  நடைபெற்றது. இந்தப் போட்டியில் கொலம்பியா அணி 2 இற்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. மிகுந்த விறு விறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 9 நிமிடங்களுக்குள் மூன்று கோல்களும் அடிக்கப்பட்டமை சுவாரசியமானதாகும். கொலம்பியா அணி சார்பாக ஜேம்ஸ் ரொட்ரிகஸ் 64ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். ஜுஆன் குயின்டரோ 70ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்தார். 73ஆவது நிமிடத்தில் ஐவரி கோஸ்ட் வீரர் ஜெர்வினோ தனது அணிக்கான முதல் கோலை அடித்தார். போட்டியின் நாயகனாக கொலம்பியா அணியின் ஜேம்ஸ் ரொட்ரிகஸ் தெரிவு செய்யப்பட்டார். இது குழு C இற்கான போட்டியாகும்.

இரண்டாவது போட்டி உருகுவே - இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் உருகுவே அணி 2 இற்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. உருகுவே அணி சார்பாக அடிக்கப்பட்ட இரண்டு கோல்களையும் லூயிஸ் சொரஸ் பெற்றுக் கொண்டார். முதல் கோல் 39ஆவது நிமிடத்தில் அடிக்கப்பட்டது. 75ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து அணி வீரர் வேய்ன் ரூனி அடித்த கோல் மூலம் போட்டி சமநிலை அடைந்தது. 85ஆவது நிமிடத்தில் சொரஸ் வெற்றி கோலை அடித்தார். லூயிஸ் சொரஸ் போட்டியின் நாயகனாக தெரிவானார். இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ள இங்கிலாந்து அணி முதற் சுற்றுடன் வெளியேற்றப்பட்டுள்ளது. உருகுவே அணி முதற்ப் போட்டியில் தோல்வியடைந்த போதும் இந்த வெற்றியானது அவர்களுக்கு வாய்ப்பை வழங்கியுள்ளது. இங்கிலாந்து அணி முன்னணி அணியாக திகழும் அதேவேளை இறுதிக் கட்டம் வரை முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்ட அணி. இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய முன்னணி அணிகள் இந்த வருட தொடரின் இரண்டாம் கட்ட வாய்ப்பை இதுவரை இழந்த அணிகளாகும்.

குழு C இன் போட்டி, ஜப்பான், கிரீஸ் அணிகளுக்கிடையில் மூன்றாவது போட்டியாக நடைபெற்றது. இரு அணிகளும் கோல்கள் எதையும் பெறாமல் சமநிலையில் நிறைவு செய்தன. போட்டியின் நாயகனாக கெய்சுகி ஹொண்டா தெரிவானார்.

குழு C இல் இரண்டு  போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள கொலம்பியா அணி அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளது. 90 ஆண்டுக்கு பின்னர் இரண்டாம் சுற்றுக்கு முதற் தடவையாக கொலம்பியா அணி தெரிவாகியுள்ளது. மற்றைய மூன்று அணிகளுக்கும் இன்னமும் வாய்ப்புக்கள் உள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X