2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

ஆர்சனல் வெற்றி, செல்சி தோல்வி

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 25 , மு.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாடக் கழகங்களிடையே இடம்பெற்று வரும் பிறிமியர் லீக் தொடரில் ஆர்சனல், வெஸ்ட் ஹம், லெய்செஸ்டர் சிற்றி, சுவான்சீ சிற்றி, வெஸ்ட் புரோம், வட்போர்ட் ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

ஆர்சனல், எவேர்ட்டன் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் 36வது நிமிடத்தில் ஆர்சனல் அணியின் ஒஸிடமிருந்து பந்தைப் பெற்ற ஒலிவியர் ஜிரூட் தலையால் முட்டி கோலாக்க அவ்வணி முன்னிலை பெற்றது. தொடர்ந்தும் அடுத்த இரண்டு நிமிடத்தில் சண்டி கஸோர்லாவிடமிந்து பந்தைப் பெற்ற லோ கொஸ்ஸென்கி தலையால் முட்டி கோலாக்க அவ்வணி 2-0 என்று முன்னிலை பெற்றது. தொடர்ந்து 44வது நிமிடத்தில் எவேர்ட்டன் அணியின் ரொஸ் பார்க்கிலி ஒரு கோலைப் பெற்றிருந்தாலும், பின்னர் ரோமேலு லுககு வாய்ப்பொன்றை தவறவிட அவ்வணி தோல்வியடைந்தது. இந்த வெற்றியுடன் ஆர்சனல் அணி பெப்ரவரி 2014ஆம் பின்னர் முதற்தடவையாக பிறிமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு வந்துள்ளது.

இதேவேளை தற்போதைய பிறிமியர் லீக் சம்பியன்களான செல்சி அணி 1-2 என்ற கோல் கணக்கில் வெஸ்ட் ஹம் அணியிடம் தோல்வியுற்றுள்ளது. வெஸ்ட் ஹம் அணி மௌரோ ஸராட்டே 17வது நிமிடத்தில் பெற்ற கோலின் மூலம் முன்னிலை பெற்றது. எனினும் 56வது நிமிடத்தில் செல்சி அணியின் கரி காகில் கோலோன்றைப் கோல் எண்ணிக்கையை சமப்படுத்தினார். எனினும் 79வது நிமிடத்தில் வெஸ்ட் ஹம் அணியின் அன்டி கரோல் பெற்ற கோலின் மூலம் அவ்வணி வெற்றி பெற்றது. இப்பருவகாலத்தின் முதற் பத்து போட்டிகளில் செல்சி அணி பெறும் ஐந்தாவது தோல்வி இதுவாகும். இப்போட்டியின் இடைவேளையின்போது நடுவருடன் வாக்குவாதப்பட்ட செல்சி அணியின் பயிற்சியாளர் மொரின்கோ, சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டிருந்தார்.   

இதேவேளை லெய்செஸ்டர் சிற்றி அணி 1-0 என்ற கோல் கணக்கில் கிறிஸ்ட்டல் பலஸ் அணியை தோற்கடித்திருந்ததோடு, சுவான்சீ சிற்றி அணி 2-1 என்ற கோல் கணக்கில் அஸ்டன் வில்லா அணியை தோற்கடித்திருந்ததோடு, வெஸ்ட் புரோம் அணி 1-0 என்ற கோல்கணக்கில் நோர்விச் சிற்றி அணியை தோற்கடித்திருந்ததுடன், வட்போர்ட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்டோக் சிற்றி அணியை தோற்கடித்திருந்தது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .