Shanmugan Murugavel / 2015 நவம்பர் 10 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த வருட பங்களாதேஷ் பிறிமியர் லீக் போட்டிகளில் பங்கேற்க எதிர்பார்த்துள்ள இலங்கை கிரிக்கெட் சபையுடன் ஒப்பந்தத்தை கொண்டுள்ள ஆகக்குறைந்த 16 வீரர்களுக்கு, ஆட்சேபனை மறுப்புக் கடிதம் வழங்கப்படமாட்டாது என இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பதிலுக்கு, பி.பி.எல் இடம்பெறும் நவம்பர் 22ஆம் திகதி முதல் டிசம்பர் 15 வரையான காலப்பகுதியில், உள்ளூரில் இடம்பெறவிருக்கும் பிறிமியர் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் தொடரில் பங்குபற்றுமாறு வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் தவிர, சிலர் நியூசிலாந்துக்கான இலங்கை சுற்றுப்பயணத்துக்கு தேவைப்படுபவர்களாகவும் உள்ளார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாட்டு கிரிக்கெட் வீரர்கள், அந்நிய நாட்டு கிரிக்கெட் தொடரொன்றில் பங்கேற்கும்போது, தமது நாட்டு கிரிக்கெட் சபையிடமிருந்து மேற்படி ஆட்சேபனை மறுப்புக் கடிதம் பெறாமல் விட்டால் அந்நிய நாட்டு தொடர்களில் பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், இன்னும் சில நாட்களுக்குள் இலங்கை கிரிக்கெட் சபை ஆட்சேபனை மறுப்புக் கடிதத்தை வழங்கும் என தாங்கள் நம்புவதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்றதிகாரி நிஸாமுடின் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .