Gopikrishna Kanagalingam / 2016 ஓகஸ்ட் 05 , மு.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில், அவுஸ்திரேலிய அணி 106 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.
காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றுவரும் இப்போட்டியில் 2 விக்கெட்டுகளை இழந்து 54 ஓட்டங்களுடன் இன்றைய நாளை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி, சுழற்பந்து வீச்சாளர்களின் சுழலில் சிக்கித் தடுமாறியது. இன்றைய தினத்தில் 19.5 ஓவர்கள் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 52 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 8 விக்கெட்டுகளை இழந்தது. இதனால், 106 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
துடுப்பாட்டத்தில் நேற்றைய தினம் ஆட்டமிழந்த டேவிட் வோணரின் 42 ஓட்டங்கள், இன்றைய தினம் இறுதிவரை போராடி, இறுதி விக்கெட்டாக ஆட்டமிழந்த மிற்சல் மார்ஷின் 27 ஓட்டங்கள், இன்றைய தினம் முதலாவது விக்கெட்டாக வீழ்த்தப்பட்ட உஸ்மான் கவாஜாவின் 11 ஓட்டங்கள் ஆகியன மாத்திரமே, இரட்டைப்படை ஓட்டங்களாக அமைந்தன.
பந்துவீச்சில் ஹட்-ட்ரிக் சாதனை புரிந்த ரங்கன ஹேரத், 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். டில்ருவான் பெரேராவுக்கும் 4 விக்கெட்டுகள் கிடைக்க, லக்ஷான் சந்தகானும் அறிமுக வீரர் விஷ்வா பெர்ணான்டோவும் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் முதல் இனிங்ஸில் இலங்கை அணி 281 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், 175 ஓட்டங்களால் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
20 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
25 minute ago