2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

கிரிக்கெட்டுக்குத் தாவிய டென்னிஸ் வீராங்கனை

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தொழில்முறை டென்னிஸ் வீராங்கனையான ஆஷ்லெய்க் பார்ட்டி, அவுஸ்திரேலியாவின் உள்ளூர் இருபதுக்கு-20 தொடரான பிக் பாஷ் லீக் தொடரின் பெண்கள் தொடருக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

2013ஆம் ஆண்டின் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ், விம்பிள்டன் தொடர், ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர் ஆகியவற்றின் பெண்கள் இரட்டையர் பிரிவில் இறுதிப் போட்டிக்கு நுழைந்த இவர், அதற்கு முன்னதாக 2011ஆம் ஆண்டில் விம்பிள்டன் தொடரில் இளைய பெண்களுக்கான தனிநபர் சம்பியன் பட்டத்தையும் வென்றிருந்தார்.

எனினும், இவ்வாண்டு ஜூலையிலிருந்து டென்னிஸிலிருந்து விடுப்பை எடுத்துக் கொண்ட அவர், கிரிக்கெட் தொடர்பான தனது ஆர்வத்தை குயீன்ஸ்லாந்து கிரிக்கெட் சபையிடம் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே, முதன்முறையாக இடம்பெறவுள்ள பிக் பாஷ் லீக் பெண்கள் தொடரில், பிறிஸ்பேண் ஹீற் அணி சார்பாக அவர் பங்குகொள்ளவுள்ளார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .