Shanmugan Murugavel / 2015 செப்டெம்பர் 17 , பி.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து பிறிமியர் லீக் போட்டிகளை மோசமாத் தொடங்கி தற்போது பதினேழாவது இடத்தில் உள்ள செல்சி கால்பந்தாட்டக் கழகம், சம்பியன்ஸ் லீக்கின், தனது முதற்போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில், இஸ்ரேலிய சம்பியன்களான மக்கபி டெல் அவிவ் அணியை வீழ்த்தியது.
ஆரம்பத்தில் கிடைத்த தண்டஉதையை ஈடின் ஹசார்ட் பயன்படுத்த தவறியபோதும், போட்டியின் 15வது நிமிடத்தில் கிடைத்த ப்ரீகிக்கை வில்லியன் கோலாக்கி தனது அணிக்கு முன்னிலை வழங்கினார். தொடர்ந்து முதற்பாதியின் இறுதிநிமிடத்தில் கிடைத்த தண்ட உதையை ஒஸ்கார் கோலாக்க 2-0 என்று முன்னிலை பெற்ற அவ்வணி, இரண்டாவது பாதியில் 58வது நிமிடத்தில் டியகோ கோஸ்ட்டா ஒரு கோலையும், பப்ரிகாஸ் 78வது நிமிடத்தில் ஒரு கோலையும் பெற, இறுதியில் செல்சி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
ரோமா அணியின் பின் கள வீரரான அலெஸ்சான்றோ புளோரென்சி, கோல்கம்பத்திலிருந்து 40 மீற்றர் தூரத்தில் இருந்து பெற்ற அபாரமான கோல் கைகொடுக்க, தற்போதைய சம்பியன்களான பார்சிலோனா அணி, 1-1 என்ற கோல் கணக்கில் போட்டியை சமநிலையில் முடித்துக்கொண்டது.
முன்னதாக இந்தப்போட்டியின் முதற்பாதியின் 21வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் லூயிஸ் சுராஸ் ஒரு கோலினைப் பெற்றிருந்தார். எனினும் தனது போட்டியாளரான கிறிஸ்ட்டியானோ ரொனால்டோவிடம் சம்பியன்ஸ் லீக்கில் அதிக கோல்கள் பெற்றவர் என்ற சாதனையை பறிகொடுத்த, தனது 100வது சம்பியன்ஸ் லீக் போட்டியில் பங்கேற்றிருந்த லயனல் மெஸ்ஸி பிரகாசிக்க தவறியிருந்தார்.
இதேவேளை ஒலிவர் கிராவுட், போட்டியில் இரண்டு தடவைகள் மஞ்சள் அட்டை காட்டப்பட்டதால், சிவப்பு அட்டை காட்டப்பட்டு, போட்டியிலிருந்து வெளியேற்றப்பட, பத்து பேருடன் விளையாடிய ஆர்செனல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் டினமோ சாகிறப் அணியுடன் தோல்வியைத் தழுவியது.
போட்டியின் 24வது நிமிடத்தில் டினமோ சாகிறப் அணியின் ஜோசிப் பிவரிக் அடித்த பந்தை ஆர்செனல் அணியின் கோல்காப்பாளர் டேவிட் ஒஸ்பினா தடுத்த போதும் அது ஆர்செனல் அணியின் அலெக்ஸ் ஒக்ஸ்லேட்-செம்பர்லினில் பட்டு ‘ஒவ்ண்’ கோலாக டினமோ சாகிறப் முன்னிலை பெற்றது. தொடர்ந்து 58வது நிமிடத்தில் பெர்னாண்டஸ் பெற்ற கோலின் மூலம் 2-0 என்ற நிலையில் அவ்வணி முன்னிலை பெற்றது. தியாகோ வோல்கோட் 79வது நிமிடத்தில் ஆர்செனல் அணிக்காக ஒரு கோலினைப் பெற்றபோதும், அவ்வணி இறுதியில் 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .