2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

தேர்தலில் தாமதமிருக்கக்கூடாது: அலி

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 14 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

செப் பிளாட்டரை பிரதீயீடு செய்யும் நபரை தேர்ந்தெடுப்பதில் இருக்கும் எந்தவொரு தாமதமும் மேலும் உறுதியற்ற நிலையை உருவாக்கும் என பீபா தலைவர் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களில் ஒருவரான ஜோர்தானிய இளவரசர் அலி பின் அல்-ஹுசைன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரியில் இடம்பெறவுள்ள தேர்தலில், தற்போது இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள பீபாவின் தலைவர் செப் பிளாட்டரை பிரதீயீடு செய்ய அலி எதிர்பார்த்துள்ளார்.

எனினும் பிளாட்டரைத் தொடர்ந்து, ஐரோப்பிய கால்பந்தாட்ட கூட்டமைப்பின் தலைவர் மைக்கல் பிளட்டினியும் இடைநிறுத்தம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பெப்ரவரி மாதம் இடம்பெறவுள்ள வாக்கெடுப்பை ஒத்திவைப்பது குறித்து பீபா ஆராயவுள்ளது.

எனினும், அவ்வாறாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால், அது பாடங்கள் கற்றுக்கொள்ளப்படவில்லை என உலகத்துக்கு செய்தியை வழங்குவதாக இருக்கும் என அலி தெரிவித்துள்ளார்.

சுவிற்ஸர்லாந்து நாட்டைச் சேர்ந்த பிளாட்டரும், பிரான்ஸைச் சேர்ந்த பீபாவின் உபதலைவர்களில் ஒருவரான பிளட்டினியும் தமது இடைக்கால தடைகளுக்கெதிராக முறையீடு செய்துள்ளனர்.

இதேவேளை பொதுச் செயலாளர் ஜெரோம் வல்க்கியும் இடைநிறுத்தப்படுள்ளார். எனினினும், மூவரும் தாம் தவறேதும் செய்யவில்லை என மறுத்துள்ளனர்.

தற்போது ஆபிரிக்க கால்பந்தாட்ட கூட்டமைப்பின் தலைவர் இஸ்ஸா ஹயட்டு, தற்காலிகத் தலைவராக செயற்பட்டு வருகின்றார்.

இதேவேளை எதிர்வரும் பெப்ரவரி 26ஆம் திகதி இடம்பெறவுள்ள தேர்தலில் தான் போட்டியிடப்போவதாக பிளட்டினி தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .