2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

10 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் புஷ்பகுமார

Editorial   / 2019 ஜனவரி 07 , பி.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியின் இடதுகை சுழற்பந்துவீச்சாளரான மாலிந்த புஷ்பகுமார, முதற்தரப் போட்டியொன்றின் இனிங்ஸொன்றில் சகல 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

மொறட்டுவையில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி நேற்று  முடிவுக்கு வந்த சராசென்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கெதிரான போட்டியில் கொழும்பு கிரிக்கெட் கழகத்துக்காக விளையாடும்போதே சராசென்ஸ் விளையாட்டுக் கழகத்தின் இரண்டாவது இனிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

அந்தவகையில், 349 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய சராசென்ஸ் விளையாட்டுக் கழகம் 235 ஓட்டங்களால் தோல்வியடைந்திருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X