2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

12,000 ஓட்டங்களை கடந்து மஹேல சாதனை

George   / 2014 நவம்பர் 09 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கை அணிவீரர் மஹேல ஜயவர்தன ஒருநாள் போட்டிகளில் 12ஆயிரம் ஓட்டங்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.

ஐதராபாத்தில் நடைபெற்று வரும் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டியில் 116 ஓட்டங்களை பெற்றபோது, அவர் இந்த சாதனையை படைத்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த நிலையில்  சிறப்பாக விளையாடிய மஹேல, சதம் அடித்தார்.

426 ஒருநாள் போட்டிகளில் விளையாடி மஹேல, 17 சதம், 74 அரைசதம் அடித்துள்ளார். அதிகபட்சமாக 144 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

இவருக்கு முன் ஜெயசூரிய 445 போட்டியில் 13,430 ஓட்டங்களும்;, சங்கக்கார 383 போட்டியில் 12,918 ஓட்டங்களும் எடுத்துள்ளனர்.

ஓருநாள் போட்டிகளில் 12 ஆயிரம் ஓட்டங்களை கடந்த 3ஆவது இலங்கை வீரர் மஹேல ஆவார்.

இதேவேளை இந்திய வீரர் டெண்டுல்கர் 463 போட்டிகளில் 18,426 ஓட்டங்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .