2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

13,000 ஒ.நா.ச.போட்டி ஓட்டங்களைப் பெற்றார் சங்கா

A.P.Mathan   / 2014 டிசெம்பர் 03 , பி.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி வரும் வீரர்களில் 13,000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற மைல் கல்லை இலங்கை அணியின் குமார் சங்ககார பெற்றார். இங்கிலாந்து அணியுடனான போட்டியில் 63 ஓட்டங்களைப் பெற்ற குமார் சங்ககார 13,000 ஓட்டங்களை தாண்டி இருந்தார். இதன் மூலம் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 13,000 ஓட்டங்களைப் பெற்ற நான்காவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுக் கொண்டார். 
 
இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கார் முதலில் 13,000 ஓட்டங்களை கடந்த அதேவேளை கூடுதலான 18,426 ஓட்டங்களைப் பெற்று கூடுதலான ஓட்டங்களைப் பெற்ற வீரர் என்ற சாதனையைப் பெற்றுள்ளார். 13,704 ஓட்டங்களைப் பெற்று அவுஸ்திரேலிய அணியின் ரிக்கி பொன்டிங் இரண்டாமிடத்தையும், 13,430 ஓட்டங்களைப் பெற்று சனத் ஜெயசூரியா மூன்றாமிடத்திலும் உள்ளனர். மீதமுள்ள போட்டிகளின் படி குமார் சங்ககார கூடுதலான ஓட்டங்களைப் பெற்றவர் வரிசையில் இரண்டாம் இடம் வரையும் முன்னேறும் வாய்ப்புக்கள் உள்ளன. உலகக்கிண்ண முதற்ப் சுற்றுப் போட்டிகள் அடங்கலாக  இலங்கை அணி இன்னமும் 17 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .