Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Editorial / 2020 ஜனவரி 30 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரின் புள்ளிகள் பட்டியலில் 19 புள்ளிகள் முன்னிலையில் லிவர்பூல் காணப்படுகின்றது.
வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 19 புள்ளிகள் முன்னிலையை லிவர்பூல் பெற்றுள்ளது.
இப்போட்டியின் 24ஆவது நிமிடத்தில் வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டின் கோல் காப்பாளர் லூகாஸ் பபியான்ஸ்கிக்கு மேலால் லிவர்பூலின் பின்களவீரர் அன்டி றொபேர்ட்சன் செலுத்தியிருந்தபோதும், வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டின் பின்களவீரர் இஸா டியோப் தடுத்திருந்தார். லிவர்பூலின் முன்களவீரர் டிவோக் ஒரிஜி காலை நீட்டியிருந்த நிலையில் சற்று விலகியே அன்டி றொபேர்ட்சனின் உதை சென்றிருந்தது.
பின்னர் அடுத்த 11ஆவது நிமிடத்தில் இஸா டியொப்பால் பின்னாலிருந்து டிவோக் ஒரிஜி வீழ்த்தப்பட வழங்கப்பட்ட பெனால்டியை லிவர்பூலின் இன்னொரு முன்களவீரரான மொஹமட் சாலா கோலாக்கி, தனதணிக்கு முன்னிலையை வழங்கினார்.
இரண்டாவது பாதியின் ஏழாவது நிமிடத்தில், வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டின் மூலையுதையொன்று லிவர்பூலின் அணித்தலைவரும் மத்தியகளவீரருமான ஜோர்டான் ஹென்டர்சனிடம் வந்த நிலையில், அதை அவர் மொஹமட் சாலாவிடம் வழங்கிய நிலையில், அவரிடமிருந்து அதைப் பெற்ற அவரின் இன்னொரு சக மத்தியகளவீரரான அலெக்ஸ் ஒக்ஸ்லேட் சம்பர்லின் கோலாக்க லிவர்பூல் தமது முன்னிலையை இரட்டிப்பாக்கியது.
பின்னர் வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டின் முன்களவீரர் றொபேர்ட் ஸ்னொட்கிறாஸின் கோல் கம்பத்தை நோக்கிய உதையை அபாரமாக லிவர்பூலின் கோல் காப்பாளர் அலிஸன் தடுத்த நிலையில் இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வென்றது.
அந்தவகையில், இப்போட்டியின் முடிவில் 70 புள்ளிகளுடன் இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் லிவர்பூல் காணப்பட, இரண்டாமிடத்திலுள்ள நடப்புச் சம்பியன்கள் மன்செஸ்டர் சிற்றி 19 புள்ளிகள் குறைவாகப் பெற்று 51 புள்ளிகளுடன் காணப்படுகிறது.
மூன்றாமிடத்தில் 48 புள்ளிகளுடன் லெய்செஸ்டர் சிற்றியும், நான்காமிடத்தில் 40 புள்ளிகளுடன் செல்சியும் காணப்படுகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
1 hours ago