2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழையால் தாமதம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 22 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீரற்ற வானிலை காரணமாக இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி, கொழும்பு பி. சரவணமுத்து மைதானத்தில் இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவிருந்தது.

எனினும், கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் தற்போது கடும் மழை பெய்து வருகின்றது.

இதனால், நாணயசுழற்சி இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

முன்னதாக காலியில் நடைபெற்ற இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .