2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக மார்வன் அத்தபத்து

Kanagaraj   / 2014 ஏப்ரல் 26 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மார்வன் அத்தப்பத்து தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக கடைமையாற்றிய போல் பப்ரகாஸ் தனது நாட்டு அணியான இங்கிலாந்து அணியுடன் இணைந்து கொண்டதை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு மார்வன் அத்தப்பத்து நியமிக்கப்பாட்டர்.

இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் நியமனம் தொடர்பாக இலங்கை கிரிக்கெட், தெரிவுக்குழு தலைவர் சனத் ஜெயசூரியா, கிரிக்கெட் குழுத் தலைவர் ரஞ்சித் பெர்னாண்டோ, பயிற்றுவிப்பளர்கள் தலைவர் ஜெரோம் ஜெயரட்ன ஆகியோர் கொண்ட குழுவை நியமித்தது.

இந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே மார்வன் அத்தப்பத்து நியமிக்கப்பாட்டர். இங்கிலாந்து தொடருக்கும், இலங்கையில் நடைபெறவிருக்கும் தென் ஆபிரிக்கா அணியுடனான தொடருக்கும் இவர் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உதவி பயிற்றுவிப்பாளராக சுழல்ப் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் ருவான் கல்பகே நியமிக்கப்பட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X