2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

ஹைதராபாத் சன் ரைசேர்ஸ் அணியும், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் வெற்றி

A.P.Mathan   / 2014 மே 12 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற போட்டிகளில் ஹைதராபாத் சன் ரைசேர்ஸ் அணியும், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளன.

முதற்ப் போட்டி மழை காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் டக் வேர்த் லூயிஸ் முறைப்படி ஹைதராபாத் சன் ரைசேர்ஸ் அணி 8 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய டெல்லி டெயார் டெவில்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 143 ஓட்டங்களைப் பெற்றது. இதில் தினேஷ் கார்த்திக் 39 ஓட்டங்களையும், கெவின் பீட்டர்சன் 35 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் டேல் ஸ்டைன், அமித் மிஸ்ரா, மொய்சஸ் ஹென்றிக்கஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பாடிய ஹைதராபாத் சன் ரைசேர்ஸ் அணியின் இன்னிங்சில் மழை குறுக்கிட   5 ஓவர்களில் 43 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 4.2 ஓவர்களில் அந்த இலக்கை பெற்று ஹைதராபாத் சன் ரைசேர்ஸ் அணி வெற்றி பெற்றது.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் துடுபாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றது. இதில் அம்பாத்தி ராயுடு 59 ஓட்டங்களையும், லென்டி சிம்மொன்ஸ் 38 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஷ்வின் 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றது. இதில் டுவைன் ஸ்மித் 57 ஓட்டங்களையும், பப் டு ப்லேசிஸ் 31 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பிரவின் குமார், லசித் மாலிங்க ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X