2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

சிறுமியை வன்புணர்ந்தவருக்கு 7 வருட கடூழிய சிறை

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 17 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு பிரதேசம் ஒன்றில் கடந்த 2014 ம் ஆண்டு 13 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட ஆண் ஒருவருக்கு 20 வருடம் ஒத்திவைக்கப்பட்ட  7 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 இலட்சம் வழங்குமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி கடந்த 11 ம் திகதி தீர்ப்பளித்தார்.

குறித்த பிரதேசத்தில் கடந்த 2014ம் ஆண்டு 13 வயது சிறுமி ஒருவரை அப்போது 22 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையார் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியல் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் வெளி வந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த நபருக்கு எதிராக இரு குற்றச்சாட்டின் கீழ் பொலிஸார் வழக்கு தொடர்ந்து மேல் நீதிமன்றத்தில் வழக்கு இடம் பெற்று வந்துள்ள நிலையில் கடந்த 11 ம் திகதி வியாழக்கிழமை குறித்த வழக்கு விசாரணைக்கு நீதிபதி எடுத்துக் கொண்ட போது  குறித்த நபருக்கு எதிராக 2 குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சாட்சிகள் மற்றும் தடைய பொருட்கள் வைத்திய அறிக்கைகள் மூலம் குற்றவாளி என இனங்காணப்பட்டார்.

இதனையடுத்து குறித்த நபருக்;கு முதலாவது குற்றத்துக்கு 3 மாத காலம் 10 வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும். இரண்டாவது குற்றத்திற்கு 20 வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 இலட்சம் ரூபாவை வழங்குமாறும் அந்த பணத்தை வழங்காத பட்சத்தில் சிறை தண்டனை என கட்டளையிட்டு தீர்ப்பளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X