2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

இங்கிலாந்து தொடருக்கான இலங்கை ஒ.நா.ச அணி

A.P.Mathan   / 2014 மே 14 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள ஒரு நாள் சர்வதேசப் போட்டிக்கான இலங்கை  அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  அயர்லாந்து தொடரில் ஓய்வு வழங்கப்பட்ட வீரர்களான மஹேல ஜெயவர்தன, திலகரட்ன டில்ஷான் ஆகியோர் அணியுடன் இணைந்துள்ள அதேவளை , ஐ.பி.எல் தொடரில் விளையாடிக் கொண்டிருக்கும் லசித் மாலிங்க அணியுடன் விரைவில்  இணைந்து கொள்வார். திசர பெரேரா அணியுடன் ஏற்க்கனவே இணைந்து விட்டார். இங்கிலாந்து கழகமான டேர்ஹாம் பிராந்திய அணிக்கு விளையாடி வரும் குமார் சங்ககார வெள்ளிக்கிழமை அணியுடன் இணைந்து கொள்ளவுள்ளார். டெஸ்ட் போட்டிகளை கருத்திற்க் கொண்டு ரங்கன ஹேரத்திற்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. துடுப்பாட்ட வீரர் அஷான் பிரியரஞ்சன், சகலதுறை வீரர் சத்துரங்க டி சில்வா ஆகியோரும் அணியில் தொடர்ந்தும் தமக்கான இடத்தை தக்க வைத்துள்ளனர். இதேவேளை வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசாத்தும் இந்த அணிக்குள் இனைக்கப்பட்டுளார். அயர்லாந்து தொடரில் அணியில் இடம் பிடித்து இருந்த சமின்ட எரங்க, உப்புல் தரங்க, நிரோஷன் டிக்வெல்ல, கீத்ருவான் விதனாகே ஆகியோர் நாடு திரும்புகின்றனர்.
பயிற்சிப் போட்டிகள் ஏற்க்கனவே ஆரம்பித்திருக்கும் நிலையில்  ஒரு நாள் சர்வதேசப் போட்டித் தொடர் இம்மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அணி விபரம்
அஞ்சலோ மத்தியூஸ்(தலைவர்), லஹிறு திரிமன்னே(உப தலைவர்), திலகரட்ன டில்ஷான், குஷால் பெரேரா, குமார் சங்ககார, மஹேல ஜெயவர்தன, தினேஷ் சந்திமால், அஷான் பிரியரஞ்சன், சசித்திர சேனநாயக்க, அஜந்த மென்டிஸ், சத்துரங்க டி சில்வா, லசித் மாலிங்க, நுவான் குலசேகர, திசர பெரேரா, சுரங்க லக்மால், தம்மிக்க பிரசாத்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X