2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

தெரிவுப் போட்டிகள் இன்று

A.P.Mathan   / 2014 மே 28 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் தெரிவுப் போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன. மழை காரணமாக நேற்று நடைபெறவிருந்த கிங்ஸ் 11 பஞ்சாப் அணி மற்றும் கொல்கொத்தா அணிகளுக்கிடையிலான போட்டி இன்றைய தினத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.அதன் படி மாலை நான்கு மணிக்கு கொல்கொத்தா ஈடின் கார்டன் மைதனத்தில் நடைபெறவுள்ளது.

இரண்டாவது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையில் மும்பையில் நடைபெறவுள்ளது.

இந்த தொடரின் விதிப்படி முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் முதலாவது தெரிவுப் போட்டியில் மோதும். இதன்படி 14 போட்டிகளில் விளையாடி, 11 வெற்றிகளுடன்  22 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ள கிங்ஸ் 11 பஞ்சாப் அணி, 14 போட்டிகளில் விளையடி, 9 வெற்றிகளுடன் 18 புள்ளிகளைப் பெற்று  இரண்டாமிடத்தைப் பெற்றுள்ள கொல்கொத்தா நைட் ரைடேர்ஸ் அணியுடன் மோதவுள்ளது. சென்னை சுப்பர் கிங்ஸ் அணி  14 போட்டிகளில் விளையடி, 9 வெற்றிகளுடன் 18 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி 14 போட்டிகளில் விளையடி, 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகளைப் பெற்று  நான்காமிடத்தைப்  பெற்றுள்ளது.  முதற்ப்  போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாக  தெரிவாகும். தோல்வியடையும் அணி இரண்டாவது தெரிவுப் போட்டியில் வெற்றி பெற்ற அணியுடன் விளையாடும். அந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும்.

கிங்ஸ் 11 பஞ்சாப் அணி 2008 ஆம் ஆண்டு தொடருக்கு பின்னர் இந்த வருட தொடரிலேயே அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இறுதிப் போட்டிக்கு இன்னமும் தெரிவாகியதில்லை என்பதும் சுட்டிக்க் காட்டத்தக்கது. கொல்கொத்த நைட் ரைடேர்ஸ் அணி 2012 ஆம் ஆண்டு சம்பியன் ஆகிய அதேவேளை 2011 ஆம் ஆண்டு இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது. சென்னை  சுப்பர் கிங்ஸ் அணி இதுவரை நடைபெற்ற தொடர்களில் முதல் சுற்றுடன் வெளியேறியதில்லை. இரண்டு தடவைகள் சம்பியன் ஆகியுள்ளதுடன், மூன்று தடவைகள் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளனர். நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். இதில் ஒரு தடவை சம்பியன் ஆகவும் ஒரு தடவை இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் இன்றைய போட்டிகள்  விறு விறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X