Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2014 ஜூன் 03 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் தொடரின் முன்னோடிக் காலிறுதிப் போட்டிகள் நிறைவடைந்துள்ளன.
அதன் படி ஆடவர்களுக்கான காலிறுதிப் போட்டிகளில் ஸ்பெயின் வீரர்களான ரபேல் நடால், டேவிட் பெரர் ஆகியோர் ஒரு காலிறுதிப் போட்டியில் மோதவுள்ளனர்.
இரண்டாவது காலிறுதிப் போட்டியில் பிரான்ஸ் நாட்டின் காபீல் மொன்பில்ஸ் மற்றும் பிரித்தானியாவின் அன்டி முரே ஆகியோர் விளையாட தெரிவாகியுள்ளனர்.
மூன்றாவது போட்டியில் செக் குடியரசின் தோமஸ் பெர்டிச் மற்றும் சேர்பியாவின் ஏர்னஸ்ட் குல்பிஸ் விளையாடவுள்ள அதேவேளை நான்காவது போட்டியில் கனடாவைச் சேர்ந்த மிலோஸ் ரயோனிக், சேர்பிய வீரரான நொவாக் ஜோக்கோவிக் ஆகியோர் விளையாடவுள்ளனர்.
மகளிருக்கான போட்டிகளில் ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகராசா, ரஸ்சிய வீராங்கனை மரியா ஷரபோவா ஆகியோர் ஒரு போட்டியிலும், ஸ்பெயின் வீராங்கனை கர்லா சொரெஸ் நவரோ மற்றும் கனடாவின் ஜூஜின் போசார்ட் இரண்டாவது போட்டியிலும் மோதவுள்ள அதேவேளை ரஸ்சிய வீராங்கனை ஸ்வெட்னா குஸ்நெட்சோவா மற்றும் ரொமேனியா வீராங்கனை சிமோனா ஹலேப் மூன்றாவது போட்டியிலும், இத்தாலியின் சாரா எர்ரனி ஜெர்மனியின் அன்றியா பெட்கொவிக் ஆகியோர் நான்காவது காலிறுதிப் போட்டியிலும் விளையாடவுள்ளனர்.
பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் தொடர் முக்கிய கிரான்ஸ்லாம் தொடர்களில் என்பதுடன் களிமண் தரையில் நடைபெறும் தொடர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
14 minute ago
38 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
38 minute ago
51 minute ago