2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

இலங்கை – இங்கிலாந்து முதலாவது டெஸ்ட் போட்டிக்கான அணி அறிவிப்பு

Menaka Mookandi   / 2014 ஜூன் 06 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை  - இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டிக்கான அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது.

அலஸ்டயர் குக் தலைமையில் 12 வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். புதிய மூன்று வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுளளது. மூயேன் அலி, கிறிஸ் ஜோர்டான், சாம் ரொப்சன் ஆகியோரே இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள புதிய வீரர்களாவர்.

உபாதை காரணமாக சந்தேகத்தில் இருந்த விக்கெட் காப்பாளர் மத் ப்ரையர் அணியில் இணைக்கப்பட்டுளார். லியாம் பிளங்கட் 7 வருடங்களின் பின்னர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அணியில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மொன்டி பனேசர் ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக அணியில் அங்கம்வகிக்கும் வாய்ப்பை இழந்துள்ளார்.

ஆஷஸ் போட்டிகளின் தோல்வியின் பின்னர்  அணியில் இருந்து பலர் விலகியுள்ள நிலையில் பல மாற்றங்களுடன் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அலஸ்டைர் குக், மூயேன் அலி, ஜேம்ஸ் அன்டேர்சன், கரி பலன்ஸ், இயன் பெல், ஸ்டுவோர்ட் ப்ரோட், க்றிஸ் ஜோர்டான், லியாம் ப்லங்கட், மத் ப்ரையர், சாம் ரொப்சன், ஜோ ரூட், க்றிஸ் வோக்ஸ் ஆகியோரே இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள்.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .