2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

பாகிஸ்தானில் மீண்டும் கிரிக்கெட் தடை

A.P.Mathan   / 2014 ஜூன் 12 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானில் நடைபெற்ற தீவிர வாதிகளின் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருந்த அயர்லாந்து அணி தற்காலிகமாக இத்திட்டத்தை பிற்போடுவது என தீர்மானித்துள்ளது. செப்டெம்பர் மாத ஆரம்பத்தில் 3 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பாகிஸ்தானில் வைத்து விளையாட அயர்லாந்து கிரிக்கெட் சம்மதம் தெரிவித்து இருந்தது. கடந்த சில நாட்களிற்கு முன்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவருக்கும், அயர்லாந்து கிரிக்கெட் அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கபப்ட்டது.

2009 ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி மீது நடாத்தப்பட்ட தாக்குதலின் பின்னர் பாகிஸ்தானில் சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை. மீண்டும் அதற்கான முனைப்புக்கள் ஏற்படுத்தப்பட்ட நிலையில் விமான நிலையம் மீது தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல் மூலம் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X