2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

இலங்கை, இங்கிலாந்து டெஸ்ட் இன்று ஆரம்பம்

A.P.Mathan   / 2014 ஜூன் 12 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பிக்கவுள்ளது. கிரிக்கெட்டின் தாயகம் என வர்ணிக்கப்படும் இங்கிலாந்து லோர்ட்ஸ் மைதானத்தில் இந்த போட்டி இலங்கை நேரபப்டி பிற்பகல் 3.30 இற்கு ஆரம்பிக்கவுள்ளது. இலங்கை அணியானது இங்கிலாந்தில் இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இவற்றில் 2 போட்டிகளில் வெற்றிகளையும், 6 போட்டிகளில் தோல்விகளையும் சந்தித்துள்ள அதேவேளை 5 போட்டிகளை சமநிலையில் நிறைவு செய்துள்ளது.

வீரர்களின் மாற்றம், புதிய பயிற்ருவிப்பாளர் என்பன இங்கிலாந்து அணிக்கு பின்னடைவை உருவாக்கியுள்ள நிலையில் இலங்கை அணி இவற்றை சாதகமாக பாவித்து வெற்றி பெற முயற்சிக்கும் என எதிர் பார்க்கப்படுகின்றது. ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் வெற்றி பெற்றதன் மூலம் இலங்கை அணி மனதளவில் உத் வேகத்துடன் உள்ளமை மேலதிக பலமாக அமைந்துள்ளது.  ஆஷஸ் தொடரில் 5 போட்டிகளிலும் தோல்வியடைந்ததன் மூலம் இங்கிலாந்து அணி இந்த தொடரை வெல்ல வேண்டும் என்று குறியாக உள்ள நிலையில் மிகப்பெரிய அழுத்தம் ஒன்று உள்ளது. அதை இலங்கை அணி வீரர்கள் பாவித்து மேலதிக அழுத்தத்தை வழங்கினால் வெற்றி பெறும் வாய்ப்புக்கள் கிடைக்கும். இல்லாவிடில் இங்கிலாந்து அணி இலங்கை அணி மீது அழுத்தங்களை பாவித்து வெற்றி பெற முயற்சிக்கும். இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களை தவிர மற்றையவர்கள் அனுபவமானவர்கள் என்பது பலமாக அமைந்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X