2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

உலகக் கிண்ண தொடரின் மூன்றாம் நாள் முடிவுகள்

A.P.Mathan   / 2014 ஜூன் 15 , பி.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக் கிண்ண காற்ப்பந்தாட்ட தொடரில் மூன்றாவது தினத்தில் நான்கு போட்டிகள் நடைபெற்றன. முதற்ப் போட்டியில் குழு C ஐ சேர்ந்த  கொலம்பியா, கிரீஸ் அணிகள் மோதினா. இந்தப் போட்டியில் கொலம்பியா அணி 3 இற்கு 1 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது. கொலம்பியா அணியின் முதல் உலகக் கிண்ண வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது. போட்டி ஆரம்பித்து ஐந்தாவது நிமிடத்தில் பப்லோ ஆமெரொ முதல் கோலை அடித்தார். 58 வது நிமிடத்தில் டெபிலோ குட்டிஎரெஸ் இரண்டாவது கோலையும், 90 வது நிமிடத்தில் ஜேம்ஸ் ரொட்ரிகஸ் மூன்றாவது கோலையும் அடித்தனர். போட்டியின் நாயகனாக ஜேம்ஸ் ரொட்ரிகஸ் தெரிவானார்.
 
இரண்டாவது போட்டியில் கொஸ்டரிக்கா அணி உருகுவே அணியை 3 இற்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முதற் பாதியில் உருகுவே அணி 1 இற்கு 0 என முன்னிலையில் இருந்த போதும்  கொஸ்டரிக்கா அணி இரண்டாவது பாதியில் 3 கோல்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. 24 வது நிமிடத்தில் உருகுவே அணியின் எடின்சன் கவானி பனால்டி உதை மூலம் முதல் கோலைப் பெற்றார். கொஸ்டாரிக்கா அணியின் ஜோயல் கம்பல்  54 வது நிமிடத்தில் தனது அணிக்கான முதல் கோலை அடித்தார். ஒஸ்கார் டுஒர்டி 81 வது நிமிடத்தில் இரண்டாவது கோலையும், 84 வது நிமிடத்தில் மார்கோ உரேனா மூன்றாவது கோலையும் அடித்தார். போட்டியின் நாயகனாக   ஜோயல் கம்பல் தெரிவானார்.
 
மூன்றாவது போட்டியில் இத்தாலி அணி இங்கிலாந்து அணியை 2 இற்கு 1 என வெற்றி பெற்றது. விறு விறுப்பாக நடைபெற்ற போட்டியில் முதற்ப் பாதியில் இரு அணிகளும் ஒவ்வொரு கோல்களுடன் சமநிலையில் இருந்தன. போட்டியின் முதலிரு கோல்களும் 2 நிமிட இடைவெளிகளில் பெறப்பட்டன. இத்தாலியின் வெற்றி கோல் 50 வது நிமிடத்தில் பெறப்பட்டது. இத்தாலி அணியின் கிலாடியோ மர்ச்சியோ 35 வது  முதல் கோலை அடித்தார். 37 வது நிமிடத்தில் இங்கிலாதின் வீரர் டானியல் ஸ்ட்ரஜ் தங்களுக்கான முதல் கோலை அடித்தார்.  இத்தாலி அணியின் வெற்றி கோலை மரியோ பலடொலி அடித்தார். போட்டியின் நாயகனாக மரியோ பலடொலி தெரிவு செய்யப்பட்டார். இந்தப் போட்டி குழு D இற்கான போட்டியாகும்.
 
குழு C இற்கான ஜப்பான், ஐவரிகோஸ்ட் அணிகளுக்கான போட்டி நான்காவது போட்டியாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஐவரிகோஸ்ட் அணி 2 இற்கு 1 என வெற்றி பெற்றது. முதற்ப் பாதியில் 1 இற்கு 0 என ஜப்பான் அணி முன்னிலையில் இருந்த போதும் ஐவரிகோஸ்ட் அணி 2 கோல்களை இரண்டாவது பாதியில் பெற்று வெற்றி பெற்றது. கேசுக்கி கொண்டா 16 வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். வில்பிரட் போனி 64 வது நிமிடத்தில் அடித்த கோல் மூலம் போட்டி சமநிலை அடைந்தது. 66 வது நிமிடத்தில் ஜேர்வின்கோ அடித்த கோல் மூலம் ஐவரிகோஸ்ட் அணிக்கான வெற்றி கோல் கிடைத்தது. போட்டியின் நாயகனாக ருவர் யாயா தெரிவானார்.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .