2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

இலங்கை, இங்கிலாந்து டெஸ்ட் நான்காம் நாள்

A.P.Mathan   / 2014 ஜூன் 15 , பி.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளில் பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். 11 விக்கெட்கள் இரு அணிகள் சார்பாகவும் வீழ்த்தப்பட்டுள்ளன. இலங்கை அணியின் 3 விக்கெட்களும், இங்கிலாந்து அணியின் 8 விக்கெட்களும் வீழ்த்தப்பட்டுள்ளன. இங்கிலாந்து அணி தமது இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 267 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இதில் கரி பலன்ஸ் ஆட்டமிழக்காமல் 104 ஓட்டங்களையும், கிறிஸ் ஜோர்டான் 24 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரங்கன ஹேரத் 4 விக்கெட்களையும், சமின்ட எரங்க 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். 
 
இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்களை இழந்து 575 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 200 ஓட்டங்களையும், மத் ப்ரயொர் 86 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் நுவான் பிரதீப் 4 விக்கெட்களையும், சமின்ட எரங்க 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். இலங்கை அணி தமது முதல் இன்னிங்சில் சகல விக்கெட்களையும் இழந்து 453 ஓட்டங்களைப் பெற்றது. இதில் குமார் சங்ககார 147 ஓட்டங்களையும், அஞ்சலோ மத்தியூஸ் 102 ஓட்டங்களையும் பெற்றனர். கௌஷால் சில்வா 63 ஓட்டங்கள். மஹேல ஜெயவர்த்தன 55 ஓட்டங்கள். பந்துவீச்சில்  இங்கிலாந்து அணி சார்பாக ஜேம்ஸ் அன்டேர்சன், கிறிஸ் ஜோர்டான் ஆகியோர் தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளனர். 
 
இங்கிலாந்து அணி 2 விக்கெட்கள் மீதமுள்ள நிலையில் 389 ஓட்டங்களினால் முன்னிலையில் உள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X