2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

இந்திய கிரிக்கெட் அணிக்கு வெற்றி

A.P.Mathan   / 2014 ஜூன் 16 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இந்தியா அணி டக் வேர்த் லூயிஸ் முறையின் படி 7 பந்துகள் மீதமிருக்க 7 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 272 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இதில் முஸ்பிகீர் ரஹீம் 59 ஓட்டங்களையும், ஷகிப் அல் ஹசன் 52 ஓட்டங்களையும், அனாமல் ஹக் 44 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்களையும், அமித் மிஸ்ரா, பர்வேஸ் ரசூல் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு இந்திய அணி துடுப்படும் வேளையில் மழை குறுக்கிட்டது. 17ஆவது ஓவரில் போட்டி நிறுத்தப்பட்டது. மீண்டும் ஆரம்பித்த வேளை 26 ஓவர்களில் 150 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு  டக் வேர்த் லூயிஸ் முறையின் படி நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி 90 ஓட்டங்களுக்கு 1 விக்கெட் என்ற நிலையில் இருந்தது. போட்டி நிறைவடையும் போது 24.5 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 153 ஓட்டங்களைப் பெற்றது. இதில் அஜின்கையா ரெஹானே 64 ஓட்டங்களையும், ரொபின் ஊத்தப்பா 50 ஓட்டங்களையும் பெற்றனர். ஷகிப் அல் ஹசன் பந்து வீச்சில் இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றினார். போட்டியின் நாயகனாக அஜின்கையா ரெஹானே தெரிவானார். 

மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி  1 இற்கு 0 என முன்னிலை பெற்றுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X