2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

அடர்ந்த காட்டில் வழிதவறிய மாணவி

Lenin Raj   / 2026 ஏப்ரல் 07 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஹட்டன், சிங்கமலை வனப்பகுதியின் மலை உச்சியில் வழிதெரியாமல் சிக்கித்தவித்த நெதர்லாந்து நாட்டு மாணவி ஒருவரை ஹட்டன் பொலிஸார் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

திங்கள் கிழமை 06 முன்னெடுக்கப்பட்ட இந்த மீட்பு நடவடிக்கை மூலம் 20 வயதுடைய குறித்த மாணவி எவ்வித பாதிப்புமின்றி மீட்கப்பட்டுள்ளார்.

நெதர்லாந்தின் அம்ஸ்டர்டாம் பகுதியைச் சேர்ந்த லூனா (Luna) என்ற மாணவி, ருகுணு பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்வி நடவடிக்கைகளுக்காக இலங்கை வந்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை (4)சுற்றுலா நிமித்தம் ஹட்டன் பகுதிக்கு வருகை தந்த அவர், நேற்று (06) காலை சிங்கமலை வனப்பகுதிக்குத் தனியாக உலாச் சென்றுள்ளார்.

வனப்பகுதியின் உட்புறமாகச் சென்றபோது பாதையைத் தவறவிட்ட அவர், மீண்டும் திரும்பும் வழியைத் தேடியுள்ளார்.

எனினும் சரியான வழி கிடைக்காத நிலையில், மலையின் உச்சிக்குச் சென்று அங்கிருந்த பாறை ஒன்றின் மேல் சிக்கிக்கொண்டுள்ளார்.

குறித்த மாணவியின் நிலை குறித்து கல்வி ஒருங்கிணைப்பு அதிகாரி வழங்கிய புகாரைத் தொடர்ந்து, ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகரவின் ஆலோசனையின் பேரில் விசேட தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

ஹட்டன் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி நிஷாந்த டி சில்வா தலைமையிலான குழுவினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் தேடுதல் நடத்தினர்.

தீவிர தேடுதலுக்குப் பிறகு, மலை உச்சியில் இருந்த மாணவியை மீட்டு பாதுகாப்பாகக் கீழே அழைத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .