2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

’ஒப்பந்தம் அல்லது மோதல் மூலம் இலக்குகளை இஸ்ரேல் அடையும்’

Freelancer   / 2026 ஏப்ரல் 10 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாம் இன்னும் நிறைவேற்ற வேண்டிய இலக்குகள் நிறைய உள்ளன. அதனை இஸ்ரேல் ஒப்பந்தம் மூலமாகவோ அல்லது சண்டையிட்டோ அடையும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார் .

தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டதை தொடர்ந்து நாட்டு மக்களுக்கு  உரையாற்றிய பெஞ்சமின் நெதன்யாகு,

இஸ்ரேலியர்களின் மன உறுதிக்கு நன்றி தெரிவிக்கிறேன். எங்கள் அற்புதமான மக்களே, உங்களுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன். குண்டுவீச்சிலிருந்து தப்பிக்க பாதுகாப்பான தங்குமிடங்களில் நீங்கள் மன உறுதியைக் காட்டினீர்கள். இதனால் நாம் அனைவரும் இணைந்து மாபெரும் வெற்றிகளை அடைந்தோம்.

போர்க்களத்தில் உள்ள நமது வீரர்கள் மற்றும் உள்நாட்டில் உள்ள நீங்கள் அனைவரும் முக்கியமானவர்கள். ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தப் போரில் உயிர் நீத்த நமது அன்புக்குரியவர்களுக்கு நான் தலைவணங்கக் கேட்டுக்கொள்கிறேன்.

துயரத்தில் வாடும் குடும்பங்களை அரவணைக்குமாறும், காயமடைந்த நமது அன்புக்குரியவர்கள் விரைவில் குணமடைய விழையுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

என் சகோதர சகோதரிகளே, இஸ்ரேல் தேசம் மகத்தான வெற்றிகளை அடைந்துள்ளது. சமீப காலம் வரை முற்றிலும் கற்பனையாகத் தோன்றிய வெற்றிகள் இவை. ஈரான் முன்னெப்போதையும் விட பலவீனமாக உள்ளது, இஸ்ரேல் முன்னெப்போதையும் விட வலிமையாக உள்ளது.

இந்தத் தருணம் வரை, நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நாம் இன்னும் நிறைவேற்ற வேண்டிய இலக்குகள் நிறைய உள்ளன. அவற்றை நாம் உடன்படிக்கை மூலமாகவோ அல்லது மீண்டும் சண்டையைத் தொடங்குவதன் மூலமாகவோ அடைவோம் என்று அவர் கூறினார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .