Editorial / 2026 ஏப்ரல் 13 , மு.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

மத்துரட்டையில் ஒருவர் ஒருவர் அடித்துக் கொலை
மத்துரட்டையில் ஒருவர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானகொல பகுதியில் நேற்று (12) இரவு மதுபானசாலை ஒன்றிற்கு அருகில் ஏற்பட்ட மோதலில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
38 வயதுடைய மானகொல, ஏலமுல்ல பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இருவருக்கிடையில் ஏற்பட்ட தனிப்பட்ட பகையினால், சந்தேகநபர் மரப்பலகையினால் தாக்கியதில் இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 31 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
02. மருதானையில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஞ்சிகாவத்தை பகுதியில் நேற்று (12) மாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 750 கிராம் 'ஐஸ்' போதைப்பொருள் மற்றும் 150 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மருதானை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
03. நீர்கொழும்பில் சட்டவிரோத மதுபானத்துடன் பெண் கைது
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஸ்க்ரின் மாவத்தை பகுதியில் நேற்று (12) காலை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 67.5 லீற்றர் (90 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானத்துடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய பெண்மணியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
04. பாதுக்கையில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடா மீட்பு
பாதுக்கை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுமுல்ல பகுதியில் நேற்று (12) காலை ஹோமாகம குற்றத்தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 67.5 லீற்றர் சட்டவிரோத மதுபானம் மற்றும் மதுபானம் வடிக்கப் பயன்படுத்தப்படும் 1080 லீற்றர் 'கோடா' (06 பீப்பாய்கள்) என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பாக பாதுக்கை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதுக்கை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
05. கட்டுப்பொத்தையில் லொறி ஆற்றில் வீழ்ந்து விபத்து: இருவர் பலி
கட்டுப்பொத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடஹப்பொல - ரம்பாவெவ வீதியில் நேற்று (12) பகல் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி பாலத்தின் பாதுகாப்புச் சுவரில் மோதி கொழுமுணு ஓயா ஆற்றுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் படுகாயமடைந்த சாரதி மற்றும் உதவியாளர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் மீரிகம மற்றும் கல்எலிய பகுதிகளைச் சேர்ந்த 38 மற்றும் 63 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கட்டுப்பொத்தை பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Apr 2026