2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

எடப்பாடி தொகுதியில் சுயேச்சை வேட்பாளருக்கு விஜய் ஆதரவு

Editorial   / 2026 ஏப்ரல் 19 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

  

சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் கூ. பிரேம்குமாருக்கு, தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தனது முழு ஆதரவை வழங்குவதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது 'எக்ஸ்' (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:

  "எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் கூ. பிரேம்குமார், ஏற்கனவே நமது ரசிகர் மன்றத்தில் நிர்வாகியாகப் பயணித்தவர். நமது குடும்பத்தைச் சேர்ந்த சகோதரரான அவரை, தற்போதைய தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஒருமனதாக ஆதரிக்க முடிவு செய்துள்ளோம்."

  வேட்பாளர் கூ. பிரேம்குமாருக்கு வாக்களிக்குமாறு தொகுதி மக்களை விஜய் கேட்டுக்கொண்டுள்ளார். "நமது முழு ஆதரவுடன் களம் காணும் பிரேம்குமார் அவர்களை, மனதளவில் நம்முடைய வேட்பாளராகக் கருதி, தேர்தல் ஆணையத்தால் அவருக்கு அளிக்கப்பட்டுள்ள வரிசை எண் 12-இல் உள்ள 'தொலைக்காட்சிப் பெட்டி' சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்" எனத் தனது கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

  எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் செல்வாக்கை முடக்க நினைப்பவர்களுக்கு இந்த வெற்றி ஒரு பாடமாக அமைய வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் காட்டமாகத் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் நேரடியாகத் தேர்தலில் போட்டியிடாத நிலையிலும், ஒரு குறிப்பிட்ட தொகுதியில் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ள இந்த நடவடிக்கை, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .