2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

உலகக் கிண்ண தொடரில் இன்றைய போட்டிகள்

A.P.Mathan   / 2014 ஜூன் 16 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இன்றைய போட்டிகளில் முதற்ப் போட்டி ஜேர்மனி, போர்த்துக்கல் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது. இலங்கை நேரப்படி இரவு 9.30 இற்கு ஆரம்பிக்கும் இந்தப் போட்டி குழு G இற்கான போட்டி. இரு அணிகளும் 17 போட்டிகளில் மோதியுள்ளன. ஜேர்மனி அணி 9 வெற்றிகளையும், போர்த்துக்கல் அணி 3 வெற்றிகளையும் பெற்றுள்ளன. 5 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன. பலமான இரு அணிகள் மோதும் இந்தப் போட்டி விறு விறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இரண்டாவது போட்டி நள்ளிரவு 12.30 இற்கு ஈரான் - நைஜீரியா அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி குழு F இற்கான போட்டி. இரு அணிகளும் ஒரு தடவை மாத்திரமே விளையாடியுள்ளன. அந்தப் போட்டியில்  நைஜீரியா அணி வெற்றி பெற்றுள்ளது. மூன்றாவது போட்டி அமெரிக்கா, கானா அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது. இரு அணிகளும் இரண்டாவது தடவை மோதவுள்ளன. முதல் சந்திப்பில் கானா அணி வெற்றி பெற்றது. குழு G இற்கான இந்தப் போட்டி நாளை அதிகாலை 3.30 இற்கு ஆரம்பிக்கவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .