
அவுஸ்திரேலியா அணியின் பந்து வீச்சு ஆலோசகராக முத்தையா முரளிதரன் இணைக்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் ஐக்கிய அரபு ராஜ்சியத்தில் நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கே இவர் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
கிரிக்கெட்டின் உண்மையான, அதி சிறந்த ஈடுபாடு கொண்டவர் முரளி. அவர் மூலம் இந்த தொடரில் அவுஸ்திரலியா அணி மிகச் சிறந்த பெறு பேற்றை பெற்றுக் கொள்ளும். ஆடுகள நிலைமைகளை நன்கு உணர்ந்து, அறிந்து கொள்ளும் ஒருவர். அவர் தனியே சுழல்ப் பந்து வீச்சாளர்களுக்கு பயிற்சி வழங்குவது மட்டுமல்லாமல் பாகிஸ்தானின் பயங்கரமான சுழல்ப் பந்து வீச்சாளர்களை எவாறு துடுப்பாட்ட வீரர்கள் சந்திப்பது என்பதையும் அறிந்து கொள்ள முடியும் என அவுஸ்திரேலியா அணியின் பயிற்றுவிப்பாளர் டரின் லீமன் தெரிவித்துள்ளார்.
இந்த வாய்ப்பு வழங்கப்படுள்ளதையிட்டு தான் புகலாங்கிதம் அடைவதாகவும், தன்னால் இந்த தொடரில் ஒரு சிறிய முன்னேற்றத்தை அவுஸ்திரேலியா அணிக்கு வழங்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள முரளி, ஆடுகள நிலைமைகள் தனக்கு தெரியும் எனவும் அதற்கான நுட்பங்களை சுழல்ப் பந்துவீச்சாளர்களுக்கு வழங்க முடியும் எனவும் முரளி தெரிவித்துள்ளார். அத்துடன் சைட் அஜ்மல் உலகத்தின் சிறந்த துடுப்பாட்ட வீரர்களை அச்சுறுத்தும் மிகச் சிறந்த பந்து வீச்சாளர். அவருடைய பந்து வீச்சு என்னுடைய பாணியில் இருப்பதனால் அவுஸ்திரேலியா துடுப்பாட்ட வீரர்கள் எனது பந்துக்கு பயிற்சிகளைப் பெறுவதன் மூலம் சிறப்பாக துடுப்பாடுவார்கள் எனவும் முரளி தெரிவித்துள்ளார்.