2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

உலகக் கிண்ண இன்றைய போட்டிகள்

A.P.Mathan   / 2014 ஜூன் 22 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக்கிண்ண காற்ப்பந்தாட்ட தொடரின் இன்றைய போட்டிகளில் முதற்ப் போட்டி இரவு 9.30 இற்கு பெல்ஜியம், ரஷ்சியா அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது. இரு அணிகளும் 8 போட்டிகளில் விளையாடியுள்ளன. 4 தடவைகள் ரஷ்சியா அணியும் 3 தடவைகள் பெல்ஜியம் அணியும் வென்றுள்ளன. குழு H இல் ஒரு வெற்றியைப் பெற்று முதலிடத்தில் இருக்கும் பெல்ஜியம் அணி முதற்ப் போட்டியை சமநிலையில் நிறைவு செய்த ரஷ்சியா அணியுடன் மோதவுள்ளது.

இரண்டாவது போட்டி நள்ளிரவு 12.30 இற்கு வட கொரியா, அல்ஜீரியா  அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது. இரண்டு அணிகளும் இதுவரை 01 போட்டியில் விளையாடியுள்ளனர். கொரியா அணி அந்தப் போட்டியை வென்றுள்ளது. குழு H இல் கொரியா அணி முதற்ப் போட்டியை சமநிலையில் நிறைவு செய்த அதேவேளை அல்ஜீரியா அணி தான் விளையாடிய போட்டியில் தோல்வியடைந்துள்ளது. 

மூன்றாவது போட்டி அதிகாலை 3.30 இற்கு அமெரிக்கா, போர்த்துக்கல்   அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது. இரு அணிகளும் 5 தடவைகள் விளையாடி தலா 2 வெற்றிகளைப் பெற்றுளளனர். அமெரிக்கா அணி முதற்ப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. போர்த்துக்கல் முதற்ப் போட்டியில் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. எனவே இன்று வெற்றிக்கு போராடுவார்கள். முன்னணி அணிகளான, இங்கிலாந்து, ஸ்பெயின் அணிகள் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள நிலையிலேயே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தமை போன்று போர்த்துக்கல்லும் வெளியேற்றப்படுமோ என்ற அச்சமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .