2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

உலகக் கிண்ணம் குழு நிலையின் இறுதிக் கட்டம் இன்று ஆரம்பம்

A.P.Mathan   / 2014 ஜூன் 23 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் குழு நிலைப் போட்டிகளின் மூன்றாவதும் இறுதிக்கட்டமுமான போட்டிகள் இன்று ஆரம்பிக்கின்றன. குழுக்களில் இருந்து தெரிவாக உள்ள 2 அணிகளும் இந்தப் போட்டிகளின் மூலம் முடிவு செய்யப்படும்.
 
முதல் போட்டி இரவு 9.30 இற்கு நெதர்லான்ட்ஸ் - சில்லி  அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது. இரு அணிகளும் தாங்கள் விளையாடிய போட்டியை சமநிலையில் நிறைவு செய்துள்ளன. அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ள நிலையில் குழு B இல் முதலிடத்தை பிடிப்பதற்கு இவை விளையாடவுள்ளன.  
 
இரண்டாவது போட்டியும் இரவு 9.30 இற்கு அவுஸ்திரேலியா - ஸ்பெயின் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளது. இரண்டு அணிகளும் இதுவரை தங்களுக்குள் விளையாடியதில்லை. அடுத்த சுற்று வாய்ப்பை குழு B இல் இந்த அணிகள் இழந்துள்ள நிலையில் ஆறுதல் வெற்றிக்காக போராடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 
 
மூன்றாவது போட்டி அதிகாலை 01.30 இற்கு பிரேசில் - கமரூன் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது. இரு அணிகளும் 4 தடவைகள் விளையாடி பிரேசில் அணி 3 வெற்றிகளையும், கமரூன் அணி 1 வெற்றியையும் பெற்றுளளனர். குழு A இல்  கமரூன் அணி  அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துள்ள நிலையில் போட்டிகளை நடாத்தும் பிரேசில் அணி வெற்றி பெற்றாலே அடுத்த சுற்று வாய்ப்பை நேரடியாக பெற முடியும் என்ற நிலையில் விளையாடவுள்ளனர். சமநிலை முடிவும் போதுமானதாக இருந்தாலும் மற்றைய அணிகளில் தங்க வேண்டிய நிலை உருவாகும். 
 
நான்காவது போட்டியும் அதிகாலை 1.30 இற்கு குழு A அணிகளான குரேசியா, மெக்சிகோ அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது. இரு அணிகளுக்கும் அடுத்த சுற்று வாய்ப்பு இருப்பதனால் இரு அணிகளும் போராடும். மெக்சிகோ அணிக்கு சமநிலை முடிவு அடுத்த சுற்று வாய்ப்பை வழங்கும். இரு அணிக்களும் இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் 2 போட்டிகளில் குரேசியா அணியும், 1 போட்டியில்  மெக்சிகோ அணியும் வென்றுள்ளன. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .