2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

உலகக்கிண்ண இன்றைய போட்டிகள்

A.P.Mathan   / 2014 ஜூன் 25 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் குழு E மற்றும் குழு F போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன. இரவு 9.30 இற்கு நடைபெறவுள்ள ஒரு போட்டியில், அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ள ஆர்ஜன்டீனா அணி நைஜீரியா அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. சமநிலை முடிவைப் பெற்றால் ஆர்ஜன்டீனா அணி குழு F  இல் முதலிடத்தை தனதாக்கும். நைஜீரியா அணி வெற்றி பெற்றால் முதலிடத்தைப் பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவாகும்.  ஆனால் நைஜீரியா அணியின் தோல்வி ஈரான் அணிக்கு கை கொடுக்க வாய்ப்புக்கள் உள்ளன. ஆர்ஜன்டீனா , நைஜீரியா அணிகளுக்கிடையில் இதுவரை 6 போட்டிகளில் நடைபெற்றுள்ளன.  4 போட்டிகளில் ஆர்ஜன்டீனா அணியும் 1 போட்டியில்  நைஜீரியா அணியும் வென்றுள்ள அதேவேளை 1 போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது. 
 
ஈரான், பொஸ்னியா அணிகளுக்கிடையில் குழு F இற்கான இரண்டாவது போட்டி நடைபெறவுள்ளது. இரு அணிகளும் 5 தடவைகள் விளையாடியுள்ளன. 4 போட்டிகளில் ஈரான் அணி வெற்றி பெற்றுள்ளது. 1 போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது.  பொஸ்னியா அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துள்ள நிலையிலும், ஆர்ஜன்டீனா அணி அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ள நிலையிலும் ஈரான் அணிக்கு இந்த போட்டி முக்கியத்துவத்தை வழங்கியுள்ளது. ஈரான் அணி வெற்றி பெற்று நைஜீரியா அணி தோல்வியடைந்தால் ஈரான் அணி அடுத்த சுற்று வாய்ப்பை வழங்கும். நைஜீரியா அணி சமநிலை முடிவைப் பெற்றாலே ஈரான் அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழக்கும்.  
 
அதிகாலை 01.30 இற்கு ஹொண்டுராஸ், சுவிசர்லாந்து அணிகளுக்கிடையில் குழு E  இற்கான போட்டி  நடைபெறவுள்ளது. இரு அணிகளும் விளையாடிய போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.  குழு E இல்  3 புள்ளிகளுடன் உள்ள சுவிசர்லாந்து அணி வெற்றி பெற்றால் அடுத்த சுற்று வாய்ப்பு கிடைக்கும் அதேவேளை அடுத்த போட்டியின் முடிவிலும் தங்கியிருக்க வேண்டும். ஹொண்டுராஸ், அணி  அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துள்ளது. 
 
குழு E அணிகளான பிரான்ஸ், எக்குவாடர்  அணிகளுக்கிடையில் அதிகாலை 1.30 இற்கு போட்டி நடைபெறவுள்ளது. பிரான்ஸ் அணி அடுத்த சுற்று வாய்ப்பை பெற்றுள்ள நிலையில் சமநிலை முடிவைப் பெற்றாலே குழுவில் முதலிடத்தைப் பெற்றுக் கொள்வார்கள். பிரான்ஸ் அணியின் தோல்வியே  எக்குவாடர் அணிக்கான வாய்ப்பை வழங்கும். எக்குவாடர், சுவிசர்லாந்து அணிகளுக்கிடையில் சம வாய்ப்பு உள்ள நிலையில் அந்த இரு அணிகளும் தமக்குள்ள மோதாமல் மற்ற அணிகளுடன் மோதுவது சுவாரசியத்தை தரும். பிரான்ஸ், எக்குவாடர்  அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது . இன்று நடைபெறும் போட்டி இரண்டாவது போட்டியாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .