.jpg)
உலகக் கிண்ண கால்பந்தாட்டா தொடரின் குழு நிலைப் போட்டிகளின் இறுதிப் போட்டிகள் இன்று இடம்பெறவுள்ளன. 8 குழுக்களில் இருந்து 16 அணிகளை தெரிவு செய்வதற்காக நடைபெற்றும் இந்த முதற் சுற்றில் 6 குழுக்களில் இருந்து 12 அணிகள் அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ள நிலையில் மிகுதி இரு குழுக்களில் இருந்து 4 அணிகள் இன்றைய போட்டிகள் மூலம் தெரிவாகவுள்ளன. குழு G இற்கான போட்டியில் இரவு 9.30 இற்கு அமெரிக்கா, ஜேர்மனி அணிகள் முதற்ப் போட்டியில் மோதவுள்ளன.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றுக் கொள்ளும் அணி அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் அதேவேளை சமநிலையில் நிறைவடைந்தால் இரு அணிகளும் தெரிவாகும் அதவேளை இந்தக் குழுவின் மற்றைய அணிகள் இரண்டும் வெளியேறும். இந்தப் போட்டியில் தோல்வியடையும் அணிக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. இரண்டு அணிகளும் இதுவரை தங்களுக்குள் 9 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் ஜேர்மனி அணியும் 3 போட்டிகளில் அமெரிக்கா அணியும் வென்றுள்ளன.
கானா, போர்த்துக்கல் அணிகளுக்கிடையில் குழு G இற்கான இரண்டாவது போட்டி நடைபெறவுள்ளது. இரு அணிகளும் முதற் தடவை மோதவுள்ளன. இரு அணிகளுக்கும் வாய்ப்புகள் உள்ள மோதும் முதற்ப் போட்டியின் முடிவில் தங்கியிருக்க வேண்டும். முதற்ப் போட்டியில் பெரிய கோல் வித்தியாசத்தில் ஓர் அணி தோற்க வேண்டும். இந்தப் போட்டியில் வெல்லும் அணி பெரிய கோல் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும் என்ற நிலை உள்ளது. போர்த்துக்கல் அணிக்கு மிக அரிதான வாய்ப்புகளே உள்ளன. முக்கிய அணிகள் சில இந்த தொடரில் இருந்து முதல் சுற்றோடு வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் போர்த்துக்கல் அணியும் அந்த பட்டியலில் இணையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதிகாலை 01.30 இற்கு பெல்ஜியம், வட கொரியா அணிகளுக்கிடையில் குழு H இற்கான போட்டி நடைபெறவுள்ளது. இரு அணிகளும் 3 தடவைகள் விளையாடி பெல்ஜியம் 2 வெற்றிகளை பெற்றுள்ளதோடு மற்றைய போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது. குழு H இல் பெல்ஜியம் அணி அடுத்த சுற்று வாய்ப்பை பெற்றுள்ள நிலையில் வட கொரியா அணி வெற்றி பெற்றாலே அடுத்த சுற்று வாய்ப்பை பெற முடியும். ஆனாலும் மற்றைய போட்டியின் முடிவில் தங்கியிருக்க வேண்டும் என்ற நிலையம் மிகப்பெரிய கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையும் உள்ளது. எனவே அவர்களுக்கான வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது. பெல்ஜியம் அணி சமநிலை முடிவை பெற்றாலே அவர்களுக்கு முதலிடம் உறுதியாகும்.
குழு H அணிகளான அல்ஜீரியா, ரஷ்சியா அணிகளுக்கிடையில் அதிகாலை 1.30 இற்கு போட்டி நடைபெறவுள்ளது. இரு அணிகளுக்கும் அடுத்த சுற்று வாய்ப்பு இருப்பதனால் இரு அணிகளும் போராடும். அல்ஜீரியா அணிக்கு சமநிலை முடிவு அடுத்த சுற்று வாய்ப்பை வழங்கும். வெற்றி பெற்றால், மற்றைய அணியை தங்காமல் அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும். ரஷ்சியா அணி வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆனாலும் வட கொரியா அணியின் முடிவில் தங்கியிருக்க வேண்டும். அல்ஜீரியா, ரஷ்சியா அணிகளுக்கிடையில் நடைபெற்ற ஒரு போட்டி சமநிலையில் நிறைவானது குறிப்பிடத்தக்கது.