2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

உருகுவே வீரர் சொரசுக்கு சர்வதேசப் போட்டித்தடை

A.P.Mathan   / 2014 ஜூன் 27 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் உருகுவே, இத்தாலி அணிகளுக்கிடையிலான போட்டியில் உருகுவே அணியின் முன்னணி வீரரான லூயிஸ் சொரஸ், இத்தாலி வீரர் ஒருவரின் தோள்பட்டையினை கடித்தார் என்ற குற்றத்தின் பேரில் 4 மாத சர்வதேசப் போட்டித்தடைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்தக் காலத்தில் மைதானங்களுக்குள் செல்லவும் இவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையை எதிர்த்து மீள் முறையீடு செய்ய இருப்பதாக உருகுவே கால்பந்தாட்ட சம்மேளனம் தெரிவித்துள்ளது.  
 
சரியான தடையங்கள் எதுவும் இல்லாத நிலையில் சொரசுக்கு வழங்கப்பட்டுள்ள தடை அமைந்துள்ளதாக உருகுவே கால்பந்தாட்ட சம்மேளனம் தெரிவித்துள்ளது. 
 
இவர் ஏற்கெனவே கழக மட்டப் போட்டிகளிலும் இவ்வாறு எதிரணி வீரர்களை கடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .