2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

முன்னோடி காலிறுதிகள் இன்று ஆரம்பம்

A.P.Mathan   / 2014 ஜூன் 27 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இரண்டாம் சுற்றுப் போட்டிகள் இன்று ஆரம்பிக்கின்றன. 32 அணிகள் குழு நிலைப் போட்டிகளில் விளையாடி அவற்றில் இருந்து 16 அணிகள் முன்னோடி காலிறுதிப் போட்டிகள் என அழைக்கப்படும் இரண்டாவது சுற்றுக்கு தெரிவாகியுள்ளன. அதன் படி இன்றைய முதலாவது போட்டி பிரேசில் - சில்லி அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது. 
 
பிரேசில் அணி குழு A இல் முதலிடத்தையும், சில்லி அணி குழு B இல் இரண்டாமிடத்தையும் பெற்ற அணிகள். இரு அணிகளும் இதுவரை 68 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 48 போட்டிகளில் பிரேசில் அணியும், 7 போட்டிகளில் சில்லி அணியும் வென்றுள்ள அதேவேளை 13 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன. இலங்கை நேரப்படி இரவு 9.30 இற்கு இந்தப் போட்டி ஆரம்பிக்கவுள்ளது. 
 
இரண்டாவது போட்டி கொலம்பியா - உருகுவே அணிகளுக்கிடையில் அதிகாலை 1.30 இற்கு நடைபெறவுள்ளது. குழு C இல் கொலம்பியா அணி முதலிடத்தை பெற்ற அதேவேளை குழு D இல் உருகுவே அணி இரண்டாமிடத்தைப் பெற்றது. இரு அணிகளும் இதுவரை 38 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் உருகுவே 18 வெற்றிகளையும், கொலம்பியா 11 போட்டிகளிலும் வென்றுள்ள அதேவேளை 9 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன. உருவே அணி வீரர் லூயிஸ் சொரஸ் தடைக்கு உள்ளாகியிருப்பது உருகுவே அணிக்கு பெரிய இழப்பாக அமைந்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .