2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

சர்வதேசக் கிரிக்கெட் சபையின் புதிய நிர்வாகக் குழுவின் அங்கத்துவர்கள்

A.P.Mathan   / 2014 ஜூன் 28 , பி.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேசக் கிரிக்கெட் சபையின் புதிய நிர்வாகக் குழுவின் அங்கத்துவர்களாக மேற்கிந்திய கிரிக்கெட் சபையின் தலைவர் டேவிட் கமரூன், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் நஜீம் சேதி ஆகியோர் இணைந்துள்ளனர். 
 
5 பேர் கொண்ட நிறைவேற்றுக் குழுவில் இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து சபைகளின் பிரதிநிதிகள் நிரந்தர இடத்தை வைத்துக் கொள்வார்கள். மற்றைய இடங்கள் இரண்டும் தேர்தல்களின் படி இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை மாற்றப்படும். தலைமைப் பொறுப்பும் அவ்வாறே மாற்றப்படும். ஆனாலும் தலைமைப் பொறுப்பை மூன்று சபைகளுமே தங்களுக்குள் வைத்துக் கொள்ளும். 
 
நிதி மற்றும் விளம்பரக் குழுவின் தலைவராக இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் தலைவர் ஜைல்ஸ் கிளார்க் ஜைல்ஸ் கிளார்க் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தக் குழுவில் இலங்கை கிரிக்கெட் அமைப்பின் தலைவர் ஜெயந்த தர்மதாச இணைக்கப்பட்டுள்ளார். இன்னும் சில குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தென் ஆபிரிக்கா கிரிக்கெட் சபையின் பிரதிநிதிகள் யாரும் எந்தக் குழுக்களிலும் இணைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
புதிய நிர்வாக மாற்றத்திற்கான பரிந்துரையை இந்தியா கிரிக்கட் சபை சார்பாக ஸ்ரீPநிவாசன் முன் வைத்தார். இந்த மாற்ற திட்டங்கள் முழுமையாக ஸ்ரீனிவாசனின் எண்ணத்தின் படி மாற்றப்பட்டதாகவும், சர்வதேச கிரிக்கெட் சபையின் வருவாயில் இந்திய கிரிக்கெட் சபையின் ஆதிக்கம் மிகப் பெரியளவில் இருப்பதன் காரணமாக அதை தங்களுக்கு சார்பாக பாவித்து சர்வதேசக் கிரிக்கெட் சபையை இந்தியா கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தமது கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக கொண்டு வந்துள்ளது எனவும் நம்பப்படுகின்றது 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X