உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இரண்டாம் சுற்றின் முதல்போட்டியில் பிரேசில் - சில்லி அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சமநிலை முறியடிப்பு முறை மூலம் பிரேசில் அணி 3 இற்கு 2 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்குத் தெரிவானது.
இந்தப் போட்டியின் 90 நிமிடங்கள் நிறைவில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்று சமநிலையில் நிறைவு செய்தன. இதனையடுத்து மேலதிக நேரம் வழங்கப்பட்டது. மேலதிக 30 நிமிடங்களிலும் இரு அணிகளும் சமநிலையைப் பேணி போட்டியை நிறைவு செய்தன. பனால்டி உதைகளில் பிரேசில் அணி 3 கோல்களையும், சில்லி அணி 2 கோல்களையும் பெற்றன.
போட்டியின் முதல் கோலை டேவிட் லூயிஸ் 18ஆவது நிமிடத்தில் பிரேசில் அணி சார்பாக அடித்தார். அலெக்சிஸ் சஞ்செஸ் அடித்த கோல் மூலம் போட்டி 32ஆவது நிமிடத்தில் சமநிலை அடைந்தது. போட்டியின் நாயகனாக பிரேசில் அணியின் கோல் காப்பாளர் ஜூலியர் சீஷர் தெரிவானார்.