.jpg)
உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் காலிறுதிப் போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன. முதல் போட்டியில் ஜேர்மனி, பிரான்ஸ் அணிகள் மோதவுள்ளன. இரு அணிகளும் 25 போட்டிகளில் மோதியுள்ளன. இவற்றில் 11 போட்டிகளில் பிரான்ஸ் அணியும், 8 போட்டிகளில் ஜேர்மனி அணியும் வெற்றி பெற்றுள்ளன. 5 போட்டிகள் சமநிலையில் நிறைவைடந்துள்ளன. பிரான்ஸ் அணி உலகக் கிண்ணத்தில் 14 தடவைகள் பங்குபற்றி 6 தடவைகள் காலிறுதிப் போட்டிகளில் பங்குபற்றியுள்ளன. 1938 ஆம் ஆண்டு ஒரு தடவை மாத்திரமே தோல்வியை சந்தித்துள்ளது.
ஜேர்மனி அணி உலகக் கிண்ணத்தில் பங்குபற்றிய 18 தடவைகளில் 15 தடவைகள் காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. 3 தடவைகள் மாத்திரமே காலிறுதிப் போட்டியில் தோல்வியடைந்த்துள்ளது. இலங்கை நேரப்படி இரவு 9.30 இற்கு இந்தப் போட்டி ஆரம்பிக்கவுள்ளது. ஐரோப்பாவின் இரு பலமான அணிகள் மோதும் இந்தப் போட்டி மிகுந்த விறு விறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இரண்டாவது காலிறுதிப் போட்டி உலகக்கிண்ணத்தை நடாத்தும் பிரேசில், கொலம்பியா அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது. கொலம்பியா அணி முதற் தடவையாக காலிறுதிப் போட்டியில் பங்குபற்றுகின்றது. பிரேசில் அணி 5 தடவைகள் உலகக் கிண்ணத்தை வென்று கூடுதலான தடவைகள் வென்ற அணி என்ற சாதனையை வைத்துள்ளது. 20 தடவைகள் உலகக்கிண்ணத்தில் பங்குபற்றியுள்ள பிரேசில் அணி 14 தடவைகள் காலிறுதிப் போட்டியில் விளையாடி 4 தடவைகள் மாத்திரமே தோல்வியடைந்துள்ளது.
பிரேசில், கொலம்பியா அணிகள் இதுவரை 25 போட்டிகளில் மோதியுள்ளன. இவற்றில் 12 போட்டிகளில் பிரேசில் அணி வென்றுள்ளது. 2 போட்டிகளில் கொலம்பியா அணி வெற்றி பெற்றுள்ளது. 8 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன. தென் அமெரிக்கா அணிகள் இரண்டு மோதும் இந்தப் போட்டியை அதிக ரசிகர்கள் பார்வையிட மைதானத்திற்கு செல்வார்கள் என எதிர்பார்க்கபப்டுகின்றது. இலங்கை நேரப்படி அதிகாலை 1.30 இற்கு இந்தப் போட்டி ஆரம்பிக்கவுள்ளது.