2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

தொடரை சமப்படுத்திய இலங்கை

A.P.Mathan   / 2014 ஜூலை 09 , பி.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, தென் ஆப்ரிக்கா அணிகளுக்கிடையில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை அணி 87 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தொடரை சமப்படுத்தியுள்ளது. 
 
கண்டி பல்லேகல சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 49.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 267 ஓட்டங்களைப் பெற்றது. இதில் திலகரத்ன டில்ஷான் 86 ஓட்டங்களையும், மஹேல ஜெயவர்தன 48 ஓட்டங்களையும், லஹிறு திரிமான்னே 36 ஓட்டங்களையும் பெற்றனர். 
 
பந்துவீச்சில் தென் ஆபிரிக்கா அணி சார்பாக ரயன் மக்கலரன் 4 விக்கெட்களையும், வேர்ணன் பிலாண்டர், இம்ரான் தாகிர் ஆகியோர் தலா  2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 
 
பதிலுக்கு துடுபாடிய தென் ஆப்ரிக்கா அணி 38.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஹாசிம் அம்லா 101 ஓட்டங்களையும், AB DE வில்லியர்ஸ் 29 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக லசித் மாலிங்க 4 விக்கெட்களையும், திலகரட்ன டில்ஷான் 3 விக்கெட்களையும், அஜந்த மென்டிஸ் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். போட்டியின் நாயகனாக திலகரட்ன டில்ஷான் தெரிவு செய்யப்பட்டார். 
 
3 போட்டிகள் அடங்கிய இந்த தொடரில் முதற்ப் போட்டியில் தென் ஆப்ரிக்கா  அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தொடரை இலங்கை அணி சமன் செய்துள்ளது. மூன்றவது போட்டி 12 ஆம் திகதி ஹம்பாந்தோட்ட மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X