2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

இங்கிலாந்து, இந்தியா டெஸ்ட்: வலுவான நிலையில் இந்தியா

A.P.Mathan   / 2014 ஜூலை 11 , மு.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெறும் முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் நிறைவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 43 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. சாம் ரொப்சன் 20 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுள்ளார். மொஹமட் சமி 1 விக்கெட்டினை கைப்பற்றினார். 
 
முன்னதாக இந்தியா அணியின் இறுதி துடுப்பாட்ட ஜோடியின் நல்ல துடுப்பாட்டம் இந்தியா அணியை வலுவான நிலைக்கு கொண்டு வந்தது. 457 ஓட்டங்களைப் பெற்று இந்தியா அணி சகல விக்கெட்களையும் இழந்தது. 
 
இதில் முரளி விஜய் 146 ஓட்டங்களையும், டோனி 82 ஓட்டங்களையும், புவனேஸ்வர் குமார் 58 ஓட்டங்களையும், மொஹமட் சமி 51 ஓட்டங்களையும் பெற்றனர். இறுதி விக்கெட் இணைப்பாட்டமாக மொஹமட் சமி, புவனேஸ்வர் குமார் ஆகியோர் 112 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். பந்துவீச்சில் ஜேம்ஸ் அன்டர்சன் 3 விக்கெட்களையும், ஸ்டுவோர்ட் ப்ரோட், பென் ஸ்டோக் ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .