2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

இலங்கையில் தென்ஆபிரிக்காவிற்கு முதல் வெற்றி

A.P.Mathan   / 2014 ஜூலை 12 , பி.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை - தென் ஆபிரிக்கா அணிகளுக்கிடையில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேசப் போட்டியில் தென் ஆபிரிக்கா அணி 82 ஓட்டங்களினால் வெற்றி பெற்று 2 இற்கு 1 என்ற ரீதியில் தொடரைக் கைப்பற்றியுள்ளது. தென் ஆபிரிக்கா அணி> இலங்கையில் வைத்து முதற் தடவையாக தொடரைக் கைப்பற்றியுள்ளது.
 
ஹம்பாந்தோட்டை, மஹிந்த ராஜபக்ஷ சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இன்றைய போட்டியில் முதலில் துடுப்பாடிய தென் ஆபிரிக்கா அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 339 ஓட்டங்களைப் பெற்றது. இதில் குயின்டன் டி கொக் 128 ஓட்டங்களையும் அணித் தலைவர்  AB DE வில்லியர்ஸ் 71 பந்துகளில் 108 ஓட்டங்களையும் பெற்றனர். ஹாசிம் அம்லா 48 ஓட்டங்களையும், டுமினி 29 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அஜந்த மென்டிஸ், ரங்கன ஹேரத் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றினர்.
 
பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 44.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 257 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பாக அஞ்சலோ மத்தியூஸ் 58 ஓட்டங்களையும், குஷால் பெரேரா 37 ஓட்டங்களையும், திலகரட்ன டில்ஷான் 36 ஓட்டங்களையும் பெற்றனர். தென் ஆபிரிக்கா அணி சார்பாக பந்துவீச்சில் ரயன் மக்கலரன் 3 விக்கெட்களையும், மோர்னி மோர்க்கல் 2 விக்கெட்களையும், JP டுமினி 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.போட்டியின் நாயகனாக AB DE வில்லியர்ஸ் தெரிவான அதேவேளை தொடர் நாயகனாக ஹாசிம் அம்லா தெரிவானார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .