2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

விரைவில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தேர்தல்

A.P.Mathan   / 2014 ஜூலை 21 , பி.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் தெரிவிற்கான தேர்தலை நடாத்துமாறு உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் பதவி மாறி மாறி பிரச்சினைகளுடன் ஒவ்வொருவரினது கைகளுக்கும் மாறிய வண்ணம் உள்ளது. இந்த நிலையில் நடைபெற்ற வழக்கு விசாரணை ஒன்றின் பின்னர் உடனடியாக தேர்தலை நடாத்தி ஒரு தலைவரை நியமிக்குமாறு நீதிமன்றம் அறிவித்துள்ளது. 
 
தற்போதைய தலைவர் நஜீம் சேதி 7 நாட்களுக்கு தலைவராக இருக்க முடியும் எனவும் அதற்குள் இடைக்கால உப தலைவர் ஒருவரை நியமித்து அவரிடம் தேர்தலுக்கான பொறுப்புக்களை வழங்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X