A.P.Mathan / 2014 ஜூலை 21 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் தலைவர் ஸ்டீபன் ஜெராட் தான் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2000ஆம் ஆண்டு முதல் 114 போட்டிகளில் ஜெராட் இங்கிலாந்து அணிக்காக விளையாடியுள்ளார். இந்தப் போட்டிகளில் 14 கோல்களை பெற்றுள்ளார் ஜெராட். மத்திய வரிசை வீரராக விளையாடிய ஜெராட் 2000ஆம் ஆண்டு யுக்ரைன் அணியுடன் நடைபெற்ற போட்டியில் தன் அறிமுகத்தை மேற்கொண்டார். 34 வயதான இவர் 2010 ஆண்டு உலகக்கிண்ணத் தொடரில் தலைவர் பதவியை பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போதைய தலைவர் ரியோ பெர்டினன்ட் உபாதையடைந்து அந்த தொடரில் இருந்து விலக ஜெராட் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். இம்முறை உலகக்கிண்ண தொடரில் இங்கிலாந்து அணி மோசமான தோல்விகளை சந்தித்து முதற் தொடருடன் வெளியேற்றப்பட்டது. குழு நிலைப் போட்டிகளின் இறுதிப் போட்டியில் ஜெராட் நீக்கபப்ட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .