2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

மார்வன் அத்தப்பத்துவின் பதவிகாலம் நீடிப்பு

A.P.Mathan   / 2014 ஜூலை 24 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாலாராக மார்வன் அத்தப்பத்து இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடர் வரை இடைக்கால பயிற்றுவிப்பாளராக  தொடர்வார் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. 
 
இலங்கை அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் போல் பப்ரகாஸ் விலகிச்சென்றதும் மார்வன் அத்தப்பத்து நடை பெற்று கொண்டு இருக்கும் தென் ஆபிரிக்காவின் தொடர் வரை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்தக் காலகட்டத்தில் அவர் சிறப்பாக செயற்பட்டால் அவரையே பயிற்றுவிப்பாளராக நியமிப்பது எனவும் இலங்கை கிரிக்கெட் அறிவித்து இருந்தது. இந்த நிலையில் குறித்த பதவிக்கு பகிரங்கமாக விண்ணப்பம் கோரப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார். 
 
எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை பத்திரிகை மூலம் குறித்த பதவிக்கான விளம்பரம் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் வைத்து இலங்கை அணி சிறப்பாக வெற்றிகளைப் பெற்றமை மார்வன் அத்தப்பத்துவிற்கு வாய்ப்புகளை வழங்கியுள்ளது. ஆனாலும் இலங்கை நடைபெறும் தொடர்களில் இலங்கை அணி வெற்றி பெற்றால் அவருக்கு பயிற்றுவிப்பாளர் பதவி கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .