2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

விக்கெட் காப்பில் டோனி போர்மில் இல்லை: கிர்மானி

A.P.Mathan   / 2014 ஜூலை 24 , பி.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அணித்தலைவர் டோனி விக்கெட் காப்பில் போதியளவு திறமையாக செயற்படவில்லை என இந்திய அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் சைட் கிர்மானி தெரிவித்துள்ளார். இந்திய அணியின் சிறந்த டெஸ்ட் விக்கெட் காப்பாளர் என பெயர்பெற்றவர் சைட் கிர்மானி. 88 டெஸ்ட் போட்டிகளில் 160 பிடிகளையும் 38 ஸ்டம்ப் ஆட்டமிளப்புக்களையும் ஏற்ப்படுத்தியவர் கிர்மானி. தெரிவுக்குழுவின் தலைவராகவும் கிர்மானி இருந்துள்ளார். 
 
டோனி விக்கெட் காப்பில் போர்மை இழந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். வீரர்கள் ஓய்வு எடுக்கக் வேண்டும்.இதன் மூலமே தங்களை புதுப்பித்துக் கொள்ள முடியும். ஆனால் தற்போது வீரர்களுக்கு அதற்க்கு நேரமில்லை. டோனிக்கும் அதுவே நடந்துள்ளது. டோனி 24 ஓட்டங்களை உதிரிகளாக 2 போட்டிகளில் வழங்கியதுடன், பிடிகளை சரியான முறையில் கணிக்க முடியாமல் போனது. பிடிகளையும் தவற விட்டுள்ளார் என கிர்மானி மேலும் தெரிவித்துள்ளார். 
 
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விக்கெட் காப்பாளரின் அடிப்படைகளை பின்பற்ற வேண்டும். கடந்த காலங்களில் எவ்வாறு செயற்பட்டாரோ அப்படியே செயற்படவேண்டும். வீடியோ படப்பிடிப்புகளை மீளப் பார்த்து பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை பார்த்து தன்னை தயார் படுத்த வேண்டும். இவற்றின் மூலம் இழந்த போர்மை பெறமுடியும் என சைட் கிர்மானி தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .